அதெல்லாம் முடியாது.. தளபதி போராடுவாரு.. ஆதங்கப்பட்ட ரசிகர்..

663

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதையொட்டி, நள்ளிரவு முதலே திரையரங்கு முன்பு திரண்ட ரசிகர்கள், ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடினர்.

சென்னையில் பல திரையரங்குகளில் அதிகாலை 4.30 மணிக்கே சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்களின் கூட்டத்தால் திரையரங்குகள் முன்பு திருவிழா போல காட்சியளிக்கிறது.

ரசிகர்கள் திரையரங்குகள் முன், பட்டாசு வெடித்தும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். படம் பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் பலர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி கூட்டமாக திரண்டிருந்தனர்.

இதனிடையே மாஸ்டர் படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

Advertisement