தேர்தல் வருகிறது.. விஜய் ரசிகர்கள் செய்த வேலையால் பெரும் சர்ச்சை

389

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய்.

இவரது ரசிகர்கள் விஜயின் படம் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளிவந்தால் அதனை வைரலாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் விஜய் ரசிகர்கள் பெரிய அளவிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

அதில் எம்.ஜி.ஆர். புகைப்படத்துடன் விஜய் புகைப்படம் இருப்பது போல் அந்த சுவரொட்டி அமைந்துள்ளது. அதில் மக்கள் நலனை காக்க மாணவர்களின் குறை தீர்க்க தமிழ்நாடு வேலை தமிழ்நாடு மக்களுக்கே கிடைத்திட நாடே எதிர்பார்க்கும் நாளைய முதல்வரே.. உங்கள் ஆட்சிக்கு காத்திருக்கிறோம்..

என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. தேர்தல் நெருங்கி கொண்டிக்கும் இந்த நேரத்தில் இந்த சுவரொட்டிகள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.