கொட்டும் மழையிலும் நகராமல் நிற்கும் விஜய் ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்

451

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள திரைப்படம் தான் பிகில். இந்த படத்தில் ஹுரோயினாக நயன்தாரா நடித்துள்ளார்.

மேலு‌ம் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் கால் பந்து விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார். மேலு‌ம் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.இந்நிலையில் தற்போது பிகில் பட புக்கிங்கிற்காக விஜய் ரசிகர்கள் கொட்டும் மழை என்று கூட பாராமல் திரையரங்கு முன்பு கூடியுள்ளனர்.

இதனை குறித்து பிரபல திரையரங்கான கங்கா சினிமாஸ் ஒரு ட்வீட் போட்டுள்ளது. அதில்  இதற்கு பெயர் தான் தளபதி மாஸ் என கூறியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of