விஜய் ஹசாரே டிராபி – சம்மதம் தெரிவித்த தவான் | Vijay Hazare Trophy

293

விஜய் ஹசாரே டிராபி இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்த தொடர் வரும் செப்டம்பர் 24-ந்தேதி தொடங்குகிறது. இதில் டெல்லி அணி உள்பட ரஞ்சி டிராபியில் விளையாடும் அனைத்து அணிகளும் பங்கேற்கின்றன.

இந்தத் தொடரில் விளையாடுவதற்கு தவான், ரிஷப் பந்த், நவ்தீப் சைனி ஆகியோர் சம்மதம் தெரிவித்துள்ளன. இது டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலத்தை கொடுக்கும் என டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ராஜட் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜட் சர்மா கூறுகையில் ‘‘ரிஷப் பந்த், தவான், நவ்தீப் சைனி டெல்லி அணிக்காக விளையாட எடுத்திருக்கும் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of