விஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy

341

விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்றன. நேற்றுடன் முடிவடைந்த இதில் மொத்தம் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எலைட் குரூப் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் இருந்து கர்நாடகா, பஞ்சாப், டெல்லி, சத்தீஷ்கர், மும்பை அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

எலைட் குரூப் ‘சி’ பிரிவில் இருந்து தமிழ்நாடு, குஜராத் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. பிளேட் பிரிவில் இருந்து புதுச்சேரி அணி காலிறுதிக்கு முன்னேறியது. 20ம் தேதி நடைபெற்றும் காலிறுதி ஆட்டங்களில் கர்நாடகா – புதுச்சேரி அணிகளும், டெல்லி – குஜராத் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

21-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் பஞ்சாப் – தமிழ்நாடு அணிகளும், சத்தீஷ்கர் – மும்பை அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.