ஆபத்தில் விஜய்.. பகீர் பேட்டி கொடுத்த சந்திரசேகர்..!

890

நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக வெளியான தகவல் தான், நேற்று முன்தினம் முழுவதும் தலைப்பு செய்தியாக இருந்தது.

ஆனால், அது அவருடைய தந்தையின் முயற்சியில் நடந்தது என்றும், அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும் விஜய் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இதனால், பலரும் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் பேட்டி எடுத்து வந்தனர். அந்த பேட்டிகள் பலவற்றிலும், தனது மகன் விஜய் விஷ வலையில் சிக்கியுள்ளார் என்றும், அதனால் தான் கட்சி ஆரம்பித்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விஷயம் பற்றி விரைவில் விஜய் தெரிந்துக்கொள்வார் என்று கூறிய அவர், அதன்பிறகு தந்தை செய்தது சரி என்பதை ஒத்துக்கொள்வார் என்றும் தெரிவித்தார்.

இந்த பேட்டியால், விஜய்க்கு அப்படி என்ன தான் ஆபத்து ஏற்பட இருக்கிறது என்பது பற்றி விவாதம் கிளம்பியுள்ளது.

Advertisement