தனது சொத்துக்கள் பறிமுதல் செய்வதற்கு தடை விதிக்கவேண்டும்..! – உச்சநீதிமன்றத்தில் மல்லையா வழக்கு..!

314

இந்திய வங்கிகளிடன் இருந்து சுமார் ரூ. 9000 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு ஓடியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தன்னுடைய சொத்துக்கள் மற்றும் உறவினர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இடைக்காலத் தடைக் கோரி, தொழிலதிபர் விஜய் மல்லையா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தனது சொத்துக்களையும், தனது உறவினர்கள் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் வாங்கி விட்டு லண்டனில் இருக்கும் தொழிலதிபர் விஜய் மல்லையா மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களையும் முடக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மல்லையாவின் பெயரில் மிகவும் குறைவான சொத்துக்களும், ஏனைய சொத்துக்கள் அவரது தாயார் மற்றும் குழந்தைகளின் பெயரில் இருப்பதால் அவற்றை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தனது சொத்துக்களையும், தனது உறவினர்கள் சொத்துக்களையும் முடக்குவதற்கு தடை விதிக்கக்கோரி உள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of