ரசிகர்களுக்கு அதிரடி தடை உத்தரவு போட்ட தளபதி விஜய்…?

979

சென்னை பள்ளிகரணையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விபத்து அடிப்படையில், லாரி ஓட்டுநர் மனோஜ் என்பரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அந்த பேனரை அச்சிட்ட அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சுபஸ்ரீயின் மரணத்தால் அரசியல் கட்சி தலைவர்கள் இனி பேனர் வைக்க கூடாது என தங்களது தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எந்த பேனர்களும் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பிகில் பட இசைவெளியீட்டு விழாவிற்கும் எந்த வித பேனர்களும் வைக்கக்கூடாது எனா ரசிகர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதே போன்று மதுரையில் அஜித் ரசிகர்கள் இனிமேல் பேனர்கள் வைக்கமாட்டோம் என போஸ்டர் அடித்து ஒட்டியது குறிப்பிடத்தக்கது.