வேற லெவல்யா நீங்க…! மேடையில் நெகிந்த விஜய் | Bigil Audio Launch

627

விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் பிகில். இன்று இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை தாம்பரம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று மாலை தொடங்கியது. கருப்பு சட்டையில் அரங்கில் நுழைந்த விஜயை கண்டு சுற்றம் அதிர்ந்தது. அதன் பிறகு விஜய் அவர்கள் பேச தொடங்கினார்.

‘வாழ்க்கை கூட Foot Ball மாதிரி தான். நாம Goal அடிக்க முயற்சி செய்றப்ப அத தடுக்க ஒரு கூட்டமே வரும். நம்ம டீம்ல இருக்கவனே Same Side Goal போடுவான். யாரோட அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க உங்களுக்குனு ஒரு அடையாளத்தை எடுத்துக்கோங்க. புடிச்ச எடுத்துக்கோங்க இல்லாட்டி விட்ருங்க’ என்று தொடங்கினார். மேலும் பேசிய அவர் ‘உலகத்துல உழைச்சவன மேடை ஏத்தி அழகுபாக்குற முதலாளி ரசிகர்கள் தான் ! வேற Levelயா நீங்க என்று ரசிகர்களை புகழ்ந்தார்.

‘சுட சுட ஆவி பறக்கும், அது இட்லியா இருந்தாலும் சரி, அட்லீயா இருந்தாலும் சரி என்று இயக்குனரை பற்றி கூறினார். யோகி பாபு அவர் புதுசா கட்டுன வீட்டோட கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாரு, ஆனா போக முடியல, அதுக்கு அப்புறம் தான் அவருக்கு பொண்ணு பாக்கிற விஷயத்தைப்பத்தி கேள்விப்பட்டேன், வீடு யாருவேனாலும் கட்டலாம் ஆனா தாலி ! என்று கூறி அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்தினார்.

நயன்தாராவை பற்றி பேசும்போது, பெண்கள் ஜெயிக்கிற படத்தில் வாழ்க்கையில் ஜெயித்த நயன்தாரா நடித்திருப்பது மகிழ்ச்சி என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of