காதலை பிரிக்கும் விஜய்சேதுபதி! வெளியான அதிரடி தகவல்!

962

இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் அத்தனை இயக்குநர்களும் விஜய்சேதுபதியை வைத்து தான் தன் முதல் படத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார்கள் என்று பரவலாக ஒரு கருத்து உள்ளது.

இவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அந்த கதாபாத்திரத்தோடு இணைந்து நடிப்பதில் வல்லவர். இந்நிலையில் இவர் தற்போது ஒரு பெரும் ரிஸ்க் எடுத்துள்ளார். அதாவது அவர் தெலுங்கு படம் ஒன்றில் வில்லனாக நடிக்கவுள்ளார்.

அந்த படத்தில், நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி விஜய துர்காவின் மகனும், நடிகர் சாய் தரம் தேஜின் தம்பியுமான வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாகிறார். புச்சி பாபு சனா இயக்குகிறார். வைஷ்ணவுக்கு ஜோடியாக மனிஷா நடிக்கிறார்.காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் அந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

காதல் படத்தில் வில்லன் என்பதால் என்ன சேட்டை எல்லாம் செய்யப் போகிறாரோ?. காதலை பிரிக்கும் வில்லனை ரசிகர்கள் கழுவிக் கழுவி ஊத்துவார்கள் என்று தெரிந்தும் ரிஸ்க் எடுக்கிறார் அவர்.

Advertisement