தனுஷ் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி! உற்சாகத்தில் இருக்கும் ரசிகர்கள்!

439

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது அசுரன் பட தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இது இறுதிகட்ட படப்பிடிப்பு என்றும் தெரிவித்து உள்ளார்.

அவரது தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. தனுஷ் வெளியிட்டுள்ள போஸ்டரில் அசுர வேட்டை விரைவில் என்று அறிவித்து உள்ளதால் படப்பிடிப்பு சில வாரங்களில் முடிந்து படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் தனுசுடன் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of