மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்சேதுபதி..?

937

கே.ஜி.எஃப் 1 மற்றும் 2-ஆம் பாகத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல். இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், பின்னணி வேலைகளில் இயக்குநர் பிசியாக இருக்கிறார்.

இந்த படத்தையடுத்து, நடிகர் பிரபாஸ் உடன் பிரசாந்த் நீல் இணைய இருப்பதாகவும், கேஜிஎப் படங்களை தயாரித்தவர்களே இந்த படத்தையும் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பூஜை முடிந்த நிலையில், அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில், நடிகர் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்க வைப்பதற்கு, பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏற்கனவே, மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து பலரது பாராட்டுகளை விஜய்சேதுபதி பெற்றுள்ள நிலையில், மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement