சும்மா கெத்தா…மாஸா…என்ட்ரி கொடுக்கும் விஜய் சேதுபதி..!

619

மாநகரம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் என்றே சொல்லலாம். அதன் பிறகு கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். இந்த படமும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது இவர் விஜய் நடிக்கும் ‘தளபதி 64 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதில் திமிர்பிடித்த அரசியல்வாதியாக விஜய் சேதுபதி நடிக்கிறார் எனவும் அதற்காக அவருக்கு ஸ்பெஷல் மேக்கப் போடப்படுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.