சுழற்பந்து வீச்சாளராக புது அவதாரம் எடுக்கும் மக்கள் செல்வன்

513

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகும் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்க, பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.

Image
இதை குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, சர்வதேச அளவில் முத்திரை பதித்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது என்றும்.

முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குச் சவாலாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளனர்.