மக்கள் செல்வன் என்ற பெயருக்கு ஏற்ற செயல்..! விவசாயிகளுக்கு செய்த உதவி..! நெகிழ்ச்சியில் விவசாயிகள்..!

376

ஜீரோ ஏட்டர்ஸ் நடிகர்கள் என்ற வரிசையில் முன்னணியில் இருப்பவர் விஜய்சேதுபதி. எந்த வேடம் ஏற்றாலும் சரி, அது வில்லனாக இருந்தாளும் தனது முழு அர்பணிப்பையும் கொடுத்து, நடிப்பவர்.

இவர் திரையில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும், வெகுஜன மக்களுக்கு பிடித்தமான நடிகராக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம், நிஜ வாழ்க்கையிலும், பலருக்கு இவர் உதவி செய்வது தான்.

இந்நிலையில் இயக்குநர் ஜனநாதன் இயக்கும் லாபம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். விவசாய சங்கத்தலைவராக இந்த திரைப்படத்தில் இவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக விவசாய சங்கக்கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது.

அதனை செட் போட்டு எடுக்க படக்குழு முடிவு செய்த நிலையில், ஒரிஜனலாகவே ஒரு விவசாய சங்கக்கட்டடத்தை உருவாக்குங்கள் என்று விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். இதையடுத்து உண்மையான சங்கக்கட்டடம் அமைத்து ஷீட்டிங் செய்து முடிக்கப்பட்டது.

பின்னர் அந்த உண்மையான சங்கக்கட்டடம் விவசாயிகளுக்கே கொடுக்கும்படி விஜய்சேதுபதி கூறியுள்ளார். இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு விஜய்சேதுபதி தான் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.