விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல்..! வெளுத்து வாங்கிய பிரபல பாடகி..!

3616

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது. பல்வேறு எதிர்ப்பு தெரிவித்து வந்ததையடுத்து, அப்படத்தில் இருந்து விலகுவதாக விஜய்சேதுபதி நேற்று அறிவித்தார்.

இதற்கிடையே நெட்டிசன் ஒருவர், விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து, டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்காக குரல் கொடுத்த பிரபல பாடகி சின்மயி, கடும் எதிர்ப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், “கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு ஆதரவா நிக்கிறாங்க இந்த ஊர்ல.

இதை மாற்ற யாருமே இல்லையா? பொதுவெளியில் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுப்பவனும் குற்றவாளி தான்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement