அப்படி நான் சொல்லவில்லை…, விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை

720

தமிழ் திரையுலகில் எந்த வித பின்னணியும் இல்லாமல் நுழைந்து,
தன் நடிப்பின் மூலமும், கதாப்பாத்திரங்களை தேர்வு செய்யும்
விதத்தின் மூலமும் தனக்கென தனி அடையாளத்தை
ஏற்படுத்திதயவர் விஜய் சேதுபதி.

தற்போது நடிகர் என்பதையும் தாண்டி சமூக அவலங்களுக்கு
எதிராகவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். காவிரி
பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டுப்
பிரச்னையில் பண்பாடு காக்கப்பட வேண்டும் என்றும் குரல்
எழுப்பினார்.

சபரிமலைப் பிரச்னையில், ‘மாதவிலக்கு துய்மையான ஒன்றுதான்,
அதனால் இந்த பிரச்னையில் நான் முதல்வர் பினராயி விஜயன்
பக்கம் நிற்கிறேன்’ என்றார்.

மேலும் ‘காதல் திருமணம் செய்வதன் மூலம் ஜாதியை ஒழிக்க
முடியும்’ என்று ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக தன் கருத்தை
பதிவுசெய்தார்.

இந்நிலையில் ‘பகவத் கீதை ஒன்றும் புனித நூல் கிடையாது.
இன்றைக்கு சீரழிவுக்கு இது போன்ற கற்பானையால் உருவாக்கப்பட்ட
நூல்களே காரணம்’ என்று விஜய் சேதுபதி கூறியதாக அவதூரான
செய்தி சமூக வலைதளங்களில் உலாவியது.

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த விஜய் சேதுபதி “என்
அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு
புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும்
இல்லை பேசவும் மாட்டேன்.

சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த
சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும், ஒற்றுமையும்
குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்’ என தனது
டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of