6 ஆஸ்கர்..,! அதிரடியாக களமிறங்கும் மக்கள் செல்வன்..! செம அப்டேட்..!

965

தமிழ்த்திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பாதி பேர் ரசிகர்களாக இருக்கின்றனர் என்றால், இவரின் குணத்திற்காகவே மீதி பேர் உள்ளனர்.

எதிர்தரப்பு ரசிகர்கள் இல்லாத ஒரு சில நடிகர்களில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் நடிக்கும் படம் தொடர்பாக முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், கடந்த 1994ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளியான படம் ‘பாரஸ்ட் கம்ப்’. 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கிய இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில், நடிகர் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் உரிமையை வாங்கியுள்ள அமீர்கான், அதை இந்தியாவிற்கு ஏற்ற சூழலில் மாற்றிய அமைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

Advertisement