மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் இதுவா? – அப்டேட் ஆன அசத்தல் தகவல்..!

454

மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் ரோல் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

மாஸ்டர் படம் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது.

மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார்.

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு ஒரு குட்டி கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் இரண்டு வாரம் முன் வெளியானது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி விஜய் இருக்கும் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. இருவரும் சண்டை போடுவது போல ஏற்கனவே போஸ்டர் வெளியாகி இருந்தது. இதற்காக தனியாக போட்டோ சூட் நடத்தப்பட்டது. இந்த போட்டோ பெரிய அளவில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.


இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி மாலை போட்டு இருப்பார். அதேபோல் விஜயை விட கொஞ்சம் வயதான தோற்றத்தில் இருப்பார். பார்க்க மிகவும் கொடூரமான ஏரியா வில்லன் போல இருப்பார். விஜய் – விஜய் சேதுபதி இருவரும் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படம் பெரிய வைரலானது.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி, இந்த படத்தின் போதை பொருள் விற்கும் மாபியா டானாக வருகிறார். தனது ஏரியாவில் அசைக்க முடியாத டானாக இவர் இருக்கிறார் என்கிறார்கள். இவர் மாணவர்களுக்கும் போதை பொருள் விற்பான் என்று கூறுகிறார்கள்.

அவருக்கு விஜய்க்கும் ஏற்படும் சண்டைதான் படத்தை நகர்த்தி செல்லும். படத்தின் 15 நிமிடத்திலேயே கதை சூடுபிடிக்கும். குட்டி கதை பாட்டு 15 நிமிடத்திற்கு உள்ளாகவே வந்து விடும். அதன்பின் நிறைய டிவிஸ்ட் இருக்கும் என்கிறார்கள்.

விஜய் சேதுபதி முதல் பாதி முழுக்க மாஸ் காட்டி இருப்பார் . படம் முழுக்க காவி வேஷ்டி, மாலை அணிந்த கழுத்து, சிரிப்பு இப்படித்தான் விஜய் சேதுபதி வருவார். படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் ஒரு முக்கிய வசனம் பெரிய ஹிட் ஆகும் என்றும் கூறுகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of