‘விஜய் சேதுபதி’ பட நடிகர் காலமானார்.. இயக்குநர் உருக்கமான ட்வீட்!

4172

தமிழ் சினிமாவில் தென்மேற்கு பருவக்காற்று ரேணிகுண்டா, பில்லா-2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன்.

இவர் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அந்த ட்வீட்டில், “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்கிற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அன்புநிறை இதய அஞ்சலி கணேசா!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement