விஜய்சேதுபதி இப்படி பன்னியிருக்கக் கூடாது! குமுறும் திருநங்கைகள்!

1289

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஆணாக இருந்து ஒரு குழந்தைக்குத் தந்தையான பிறகு ஆபரேசன் செய்துகொண்டு திருநங்கையாக மாறும் ஒரு பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டரின் இச்சைக்கு உடன்படுவதாக மிக வக்ரமான இரு காட்சிகள் உள்ளன. உச்சபட்சமாக மும்பையில், தான் இரண்டு குழந்தைகளைத் திருடி பிச்சையெடுப்பவர்களிடம் விற்றதாக தனது அனுபவம் ஒன்றையும் படத்தில் விஜய்சேதுபதி விவரிப்பார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் திருநங்கைகளை கொச்சைப்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக செயற்பாட்டாளர் திருநங்கை ரேவதி கூறுகையில், “விஜய் சேதுபதியாகிய உங்கள் மீது மக்கள் நிறைய மரியாதை வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே திருநங்கைகள் குழந்தைகளைக் கடத்துபவர்களா? எப்போது மும்பையில் திருநங்கைகள் குழந்தைகளை கடத்தினார்கள். அதை நீங்கள் பார்த்தீர்களா.”

கோவையைச் சேர்ந்த சில்கி பிரேமா கூறுகையில்,

“இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். விஜய் சேதுபதியையும் இப்படத்தை இயக்கியவரையும் கைது செய்ய வேண்டும்”

என்றார்

Advertisement