காஷ்மீர் விவகாரம்..! ரஜினிக்கு காரசாரமான பதிலடி கொடுத்த விஜய்சேதுபதி..!

626

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை மிகவும் துணிச்சலானது என்றும் நாடாளுமன்றத்தில் அமித்ஷா சிறப்பாக உரையாற்றினார் எனவும் புகழ்ந்து பேசினார்.

ரஜினியின் கருத்து குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் விஜய்சேதுபதியும் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், அந்த மாநில மக்களுடைய பிரச்சினையை அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பெரியார் அன்றே சொல்லி விட்டதை குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரம் குறித்து ரஜினிகாந்த் கருத்து கூறிய அதே நாளில், விஜய்சேதுபதி கருத்து கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of