இந்திய அணியில் தமிழக வீரர்கள் நிராகரிப்பா? – முரளி கார்த்திக்-ன் கருத்தால் பரபரப்பு

809

உலக கோப்பை கிரிக்கெட்டின் நேற்றைய போட்டியில் இந்திய அணி வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்படாதது குறித்து முன்னாள் ஸ்பின்னர் முரளி கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடியபோது முதன்முறையாக விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் மீண்டும் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த ஆட்டத்தில் பந்து வீசும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுடன் விளையாடும்போதும் விஜய் சங்கர் பந்து வீசவில்லை. பின்னர் விஜய் சங்கருக்கு பயிற்சியின்போது காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து விஜய் சங்கர், இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் பங்குபெறவில்லை. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் முரளி கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘விஜய் சங்கரின் காலில் அடிப்பட்டிருப்பதால் அவரால் போட்டியில் கலந்துக் கொள்ள முடியவில்லை.

பின்னர் ஏன் குளிர்பானத்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்? அதனை செய்ய அவரை தவிர யாரும் இல்லையா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வீரர்கள், இந்திய அணியில் நிராகரிக்கப்படுகிறார்கள் என்பதை முரளி கார்த்திக் குறிப்பிடுகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of