மீசையை எடுக்கச் சொன்ன இயக்குனர்.. தயங்கிய விஜய்.. – மனைவி சொன்ன வார்த்தை..!

3354

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திற்கான ஃபர்ஸ்லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்திற்காக விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வருவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் சிமோகாவில் நடந்தது.

இங்கு சிறைச்சாலை அரங்கு அமைத்து படமாக்கப்பட்டபோது, மீசையின்றி விஜய் நடித்த தகவல் வெளியாகி உள்ளது.விஜய்க்கு நெருக்கமானவர்கள்; ‘ஆரம்பத்தில், மீசையை எடுக்க விஜய் தயங்கினார்.

அவரது மனைவி சங்கீதா, ‘பரவாயில்லை… நன்றாகத் தான் இருக்கும்’ எனக் கூறவே, மீசையை எடுக்க சம்மதித்தார்’ என்கின்றனர். தற்போது இதன் படப்பிடிப்பு, சென்னை அடுத்த, பனையூரில் நடக்கிறது.