“புலிக்கு பிறந்தது பூனையாகுமா..? ஓடுறது தளபதி இரத்தம்ல..” – அந்த விஷயத்தில் கலக்கும் விஜயின் மகன்

2016

தமிழ் சினிமாவில் உயர்ந்த நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது படங்கள் ரிலீஸ் என்றாலே அது திருவிழா போல தான். நடிப்பு, நடனம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் சொல்லி அடிப்பவர் விஜய்.

குறிப்பாக இவரது நடனத்தை ரசிக்காதவர்களே இல்லை. ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை விஜய்யின் நடனத்திற்கு ரசிகர்கள் தான்.

நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் சில குறும்படங்களில் நடித்துள்ளார், அவை இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சஞ்சய் தன் தோழர் ஒருவருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும் விடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். பலர் சஞ்சய்யின் நடனத்தை பார்க்கும் போது விஜய்யை பார்ப்பது போலவே இருப்பதாகவும், புலிக்கு பிறந்தது பூனையாகுமா, ஓடுறது தளபதி இரத்தம்ல அதான் கால் இப்படி ஆடுது என்று பதிவிட்டு வருகின்றனர்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of