சுபஸ்ரீ பேனர் விபத்து..! விஜய் கேட்ட நறுக் கேள்வி..! அதிர்ந்த அரங்கம்..!

891

சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், பாடலாசிரியர் விவேக் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் விஜய், வாழ்க்கையும் கால்பந்து போலதான் என்றும், நாம் கோல் போடுவதை தடுக்க ஒரு கூட்டம் இருக்கும் என்றார்.

சில நேரங்களில் நம்முடன் இருப்பவர்களே சேம் சைடு கோல் போடும் நிகழ்வும் நடைபெறும் என்று கூறினார். யாருடைய அடையாளத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கங்கள் என அறிவுறுத்தினார்.

அரசியலில் புகுந்து விளையாடுங்கங்கள், ஆனால் விளையாட்டில் அரசியலை கொண்டு வராதீர்கள் என கேட்டுக்கொண்டார். யாரை எங்க உட்கார வைக்க வேண்டுமோ அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்றும் நடிகர் விஜய் தெரிவித்தார்.

பேனர் விழுந்து இளம்பெண் பலியான விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ, அதை செய்யாமல், லாரி ஓட்டுநர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீது பழிப் போடுவதாக விஜய் குற்றம்சாட்டினார்.

இதனிடையே சுபஸ்ரீ குறித்து விஜய் கூறிய கருத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவை விஜய் மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தாய் மொழி மீது கை வைத்தால் மன்னிக்கமாட்டோம் என்றும் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of