விஜயின் லேட்டஸ்ட் ஸ்பீச்..! இப்படி காப்பி அடிச்சிட்டாரே..? வைரலாகும் வீடியோ..!

566

இயக்குநர் அட்லியுடன் விஜய் 3-வது முறையாக இணையும் திரைப்படம் பிகில். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில், நயன்தாரா, விவேக் உட்பட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் பேசிய கருத்துக்கள் அணைத்தும் சர்ச்சைகளையும், பரபரப்புகளையும் கிளப்பியது. ஆனால் அவரது ரசிகர்கள் அந்த பேச்சை எப்போதும் போல சிலாகித்தனர்.

இவருக்கு யாருங்க எழுதி தராங்க என்று கேள்வி எழும் அளவிற்கு அவரது பேச்சு இருந்தது. விஜய் பேசும்போது ஒரு குட்டிக்கதையையும், திருக்குறள் ஒன்றையும் சொல்லி அசத்தியிருப்பார்.

இந்நிலையில் அவர் கூறிய அந்த குட்டிக்கதை, மேடை பேச்சாளர் ஒருவர் மேடையில் சொன்ன கதை என்றும்,  விஜய் சொன்ன அந்த திருக்குறளையும், அதே மேடையில் அந்த பேச்சாளர் சொல்லியுள்ளார் என்றும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of