மதுமிதா மீது போலீசில் புகார்..! காரணம் என்ன தெரியுமா..?

1132

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது பிக்-பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ஒவ்வொருத்தர் கண்டென்ட் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில், நடிகை மதுமிதா சென்ற வார எபிசோடின் போது, மிகவும் பரபரப்பான கண்டென்டை கொடுத்தார். அது என்னவென்றால், பிக்-பாஸ் வீட்டிற்குள் நடந்த பிரச்சனையின் காரணமாக நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதன் காரணமாக, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், ஏசியென்நெட் ஸ்டார் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் நடிகை மதுமிதா மீது புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில்,

“ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதாவிற்கு ஏற்கனவே 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம். மீதமுள்ள ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம்.

அதை ஒப்புக் கொண்டு சென்றார். பிறகு கடந்த 19ம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவருக்கு தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக நடிகை மதுமிதா மிரட்டல் விடுத்துள்ளார்.

பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் ‘தற்கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டி உள்ளார்”

என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகார் மனுவைப்பெற்றுக்கொண்ட காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of