த்ரில்லர் படத்தில் ஹீரோவாக நடிக்கும் ராமர்..! அதுவும் இவங்க தான் ஹீரோயினா..!

893

பிரபல தொலைக்காட்சியில் உருவான அது இது எது என்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர் ராமர். என்னமா இப்படி பண்றிங்களம்மா என்ற வசனத்தை லஷ்மி ராமகிருஷ்ணன் சொல்லும் போது கூட அந்த அளவுக்கு ரீச் ஆகவில்லை.

ஆனால் ராமர் சொன்னதும் அது பட்டிதொட்டியெங்கும் பரவியது. தொடர்ந்து ராமர் வீடு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் இவருக்கு, தற்போது யோகம் அடித்துள்ளது.

ஆம், இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் குணசித்திர வேடமோ, நகைச்சுவை நடிகர் வேடமோ இல்லைங்க. ஹீரோவாக நடிக்கப்போகிறார்.

காமெடி த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை, நாளைய இயக்குநரில் கலந்து கொண்ட மணி ராம் இயக்குகிறார். இந்த படத்தில் இவருடன் ஜோடியாக நடிக்க சஞ்சய் கல்ராணி ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ஜபீஸ் கே கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.