“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது..” – விஜயபாஸ்கர்

730

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இதுவரை 2 ஆயிரத்து 176 கர்ப்பிணி பெண்கள் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, ஆயிரத்து 515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்.

10 நாட்களில் கொரோனா குறையும் என்று முதலமைச்சர் கூறியிருந்த நிலையில், அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைவது குறித்து செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நிபுணர்களால் கணித்து சொல்ல முடியாத வைரஸாக கொரோனா உள்ளதாக கூறினார்.

Advertisement