அமெரிக்காவில் 29வது – திருமணநாளை கொண்டாடிய விஜயகாந்த்- பிரேமலதா!

835

ஜனவரி 1990 ஜனவரி 31-ம் தேதி, விஜயகாந்த்துக்கு ஆம்பூரை சேர்ந்த பிரேமலதாவுடன் கல்யாணம் நடந்தது. பள்ளியில் அத்லெடிக் சாம்பியன், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் விளையாடி, ஐபிஎஸ் கனவுகளுடன் இருந்தவர்தான் பிரேமலதா.கல்யாணம் ஆன மறுநாளே ஷூட்டிங் சென்ற விஜயகாந்த்தின் தொழில் பக்தியை கண்டு வியந்தார். இன்று ஒரு கட்சிக்கு தலைவராக விஜயகாந்த் உயர, அக்கட்சியின் மிகச்சிறந்த பிரச்சாரகராக உருவாகி உள்ளார் பிரேமலதா

ஆனால் சில வருடங்களாக விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லை. சிகிச்சைக்காக அடிக்கடி வெளிநாடு சென்று வருவதால், கட்சி ரீதியாக திறம்பட செயல்பட முடியவில்லை.

அதனால் பிரேமலதாவுக்கு பொருளாளர் பதவி வழங்கினார். மூத்த மகன் விஜய் பிரபாகரனும் அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று முக்கிய பிரச்சினைகளில் கருத்துகளை கூறி வருகிறார்.இப்போதுகூட சிகிச்சைக்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு போனாலும் முக்கிய அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கைகளை அளித்து வருகிறார் விஜயகாந்த்.

அடிக்கடி தன் குடும்பத்தாருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களையும் அங்கிருந்தபடியே வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில்கூட குடியரசு தினத்தன்று ஒரு குழந்தையை போல விஜயகாந்த் வாழ்த்து சொன்னது மக்கள் மகிழ்ச்சி கலந்த ஆர்வமுடன் பார்த்தார்கள்.இந்நிலையில், விஜயகாந்த் இன்று தன்னுடைய 29-வது திருமண நாளை கொண்டாடி உள்ளார். மனைவியுடன் கேக் வெட்டிய போட்டோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. கைகளில் கேக்கினை பிடித்தவாறும், மாறி மாறி தம்பதிகள் கேக் ஊட்டிக் கொள்வது போலவும் போட்டோக்கள் உள்ளன.

இளைய மகன் சண்முக பாண்டியனும் இருக்கிறார்.  இப்போது விஜயகாந்த் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடும் போட்டோக்களை கண்ட தேமுதிக தொண்டர்கள் திரும்பவும் உற்சாகமடைந்துள்ளனர்.