சூறாவளி பிரச்சாரத்தில் களம் இறங்குகிறார் கேப்டன்

706

வரும் தேர்தலில் விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வார் என்று தே.மு.தி.க துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க வேட்பாளர்கள் சுதீஷ் உள்ளிட்டோர் முதலமைச்சர் பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மரியாதை நிமர்த்தமாக சந்தித்தனர்.

முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனையும் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அதைதொடர்ந்து சென்னை தி.நகர் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் தமிழிசையை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தே.மு.தி.க துணை பொதுச்செயலாளர் சுதிஷ், விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வார் என்று தெரிவித்தார்.