பெண்கள் நெருப்பாக இருந்தால் மீ டூ விவகாரத்தில் எந்தப்பிரச்சினையும் வராது

543

பெண்கள் நெருப்பாக இருந்தால் எந்தப்பிரச்சினையும் வராது என்று மீ டூ விவகாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிகவின் புதிய பொருளாளராக பொறுப்பேற்றுள்ள பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்றார்.

அதன்பின் செய்தியாள்களைச் சந்தித்த பிரேமலதா, தமிழகம் முழுவதும் விரைவில் கேப்டன் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மீ டூ விவகாரம் குறித்து பேசும் போது, ஊசி இடம் கொடுத்தால்தானே, நூலால் உள்ளே நுழைய முடியும் என்பதால், பெண்கள் தைரியமாக, நெருப்பாக இருந்தால், இந்த பாலியல் தொந்தரவுகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று கூறினார்.

மீ டூ விவகாரத்தை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.