‘பிரச்சாரம் செய்றனு விஜயகாந்த் மகன் இந்தப் பக்கமே வரக்கூடாது’.., அதிமுக அதிரடி?

949

விஜயகாந்த் மகன் அன்னைக்கு பேசுன பேச்சினை இன்னும் யாரும் மறக்கவே இல்லை போல தெரிகிறது. அதிலும் அதிமுக தரப்பில் அந்த சூடு ஆறவே இல்லை. அதனால் பிரச்சாரம் செய்ய விஜயபிரபாகரன் தேவையே இல்லை என்று சொல்கிறதாம்!

கூட்டணி முடிவாவதற்கு முன்பு விஜயபிரபாகரன் கூட்டம் ஒன்றில் பேசும்போது, “விஜயகாந்துக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றவங்க எதுக்குடா எங்க வீட்டுவாசலில் வந்து கூட்டணிக்காக நின்றீர்கள். விஜயகாந்த் எப்போதும் சிங்கம் போல் தான் வருவார். ஆனால், பன்றிகள்தான் கூட்டமாக வரும். அதுபோலதான் சிலர் உள்ளனர்” என்றார்.

விஜயகாந்த் வீட்டுக்கு அந்த சமயத்தில் சென்றவர்கள் பியூஷ்கோயல், முக ஸ்டாலின், திருநாவுக்கரசு, ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள். (ஓபிஎஸ் தப்பித்தார்)

அரசியலையும் தாண்டி எல்லா தலைவராலும் நேசிக்கப்படுபவர் விஜயகாந்த். அது கட்சி தலைவர் என்ற முறையில் இல்லை. விஜயபிரபாகரன் பிறப்பதற்கு முன்பே விஜயகாந்த்தை வளர்த்து ஆளாக்கி பூரித்து மகிழ்ந்த தமிழகம் இது!

ஆனால் அத்தனை அதிருப்திகளையும், அத்தனை இழுபறிகளையும், தேடி தந்துவிட்டது அன்று விஜயபிரபாகரன் பேச்சினால்தான்! இதை யாரும் வெளியில் பகிரங்கமாக சொல்ல மாட்டார்கள், சொல்லவும் முடியாது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மறக்க மாட்டார்கள்!

இதன்பிறகுதான் கூட்டணி முடிவாகி பிரச்சாரங்கள் தேமுதிக தரப்பில் நடந்தது. விஜயகாந்த்துக்கு உடம்பு சரியில்லை, அதனால் பிரேமலதாதான் பிரச்சாரம் செய்தார். அதிலும் ஏகப்பட்ட சர்ச்சைகள்.. உளறல்கள்! மற்றொரு பக்கம் விஜயபிரபாகரன் பிரச்சாரம் செய்தாலும், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

குறிப்பாக அதிமுக தரப்பே அதை ரசிக்கவில்லையாம். அதிலும் விருதுநகர் தொகுதி டி.கல்லுப்பட்டியில் வேட்பாளர் அழகர்சாமி இல்லாமலேயே பிரச்சாரம் செய்துவிட்டு போனார் விஜயபிரபாகரன். பிரச்சாரங்களிலும் “எங்க வயித்தெறிச்சல் சும்மா விடாது, அதான் துரைமுருகன் வீட்டில் ரெய்டு” என்று மட்டுமே பேசிவந்தார்.

இப்போது 4 தொகுதி தேர்தல் நடக்க போகிறது. பிரேமலதாவும் பிரச்சாரம் செய்ய போவதாக சொல்லி இருக்கிறார். இதனை அதிமுக தரப்பு வரவேற்றாலும், விஜயபிரபாகரனை மட்டும் பிரச்சாரத்திற்கு வேண்டாம் என்று சொல்லி விட்டதாக தகவல்கள் கசிகின்றன.

இப்போதைக்கு எந்த சர்ச்சையும் இல்லாமல் தேர்தலை நல்லபடியாக முடித்து, ஆட்சியை காப்பாற்ற அதிமுக போராட்டத்தில் உள்ளது. இந்த சமயத்தில் எதையாவது பேசி வைத்து வம்பாகி விடப்போகிறதோ என்றுதான் விஜயகாந்த் மகனுக்கு தடை சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படி அதிமுக தரப்பு சொல்லிவிட்டதால், விஜயகாந்த் குடும்பத்தினர் செம அப்செட்டில் உள்ளார்களாம்!

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of