மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு..? விஜயகாந்தின் மகன் அணிந்த டி-சார்ட்..!

1038

டெல்லி விமான நிலையத்தில், இயக்குநர் வெற்றிமாறன் இந்தி தெரியாததால், அவமானப்படுத்தப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டானது.

இதுமட்டுமின்றி, இந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்டுள்ள டி-சார்ட்டுகளும் பெரும் பிரபலமானது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் அணிந்துள்ள டி-சார்ட் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த டி-சார்ட்டில், “அனைத்து மொழிகளையும் கற்போம்.. அன்னை மொழியையும் காப்போம்..” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்த வாசகங்கள் பலமொழி கொள்கைக்கு ஆதரவாக இருப்பதால், தேமுதிக-வின் நிலைப்பாடு இருமொழிக் கொள்கையா? மும்மொழிக் கொள்கையா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement