கம்பீர குரலுடன் விஜயகாந்த் வருவார்

577

துப்புரவு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இணையாக தங்களுக்கு ஊதியம் வழங்குவதால் துப்புரவு பணி செய்யும் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஐந்து நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் உண்னாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களது குழந்தைகளுடன் போராட்டம் வருகின்றனர்.

தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை, போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால், இதுவரை 175க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தாமதம் ஏற்படுகிறது. பலருக்கு அங்கேயே மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியமே தங்களுக்கும் வழங்கப்படுவதால் இன்று முதல் துப்புரவு பணி செய்யும் போராட்டத்திலும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடை நிலை ஆசிரியர்களை சந்தித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்கு கம்பீர குரலுடன் விஜயகாந்த் வருவார் என்றும் அவர் கூறினார்.