“நான் மீண்டும் வருவேன்” – தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்

239

மக்களுக்கு நல்லது செய்வதற்காக மீண்டும் வருவேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அக்கட்சி நிர்வாகிகளுக்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், விரைவில் மீண்டு வருவேன் என கூறினார்.

பிரேமலதா விஜயகாந்த் பேசியபோது, விரைவில் விஜயகாந்த் தேர்தலில் பரப்புரை செய்வார் என்றும், கொடுக்கும் வார்த்தை எப்போதும் மாறாது என்றும், அதனால் தங்கள் மீது குட்ட நினைக்க கூடாது. அதற்கு குனியவும் மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement