குட்கா வழக்கில் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவார்கள்

387

குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் உள்பட அனைவரும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவார்கள் என்று அ.ம.மு.க செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அ.தி.மு.க.விலுருந்து 5 அமைச்சர்களும், 70 எம்.எல்.ஏ.க்களும் டி.டி.வி. தினகரன் பக்கம் வருவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் மாணவி சோஃபியாவிற்கு அறிவுரை கூறாமல், மாணவியை மிரட்டி ரவுடிசம் செய்தது கண்டிக்கத்தக்கது என்றார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.