அசத்தல் “கிக்”..13 வருடங்களுக்கு பிறகு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் பிரபல நடிகை…!

1221

நடிகை விஜயசாந்தி `சரிலேறு நீக்கெவரு’ படத்தில் நடித்த ஸ்டன்டு சீன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை விஜயசாந்தி 1980 ஆம் ஆண்டு தனது 14 வயதில் சினிமாத்துறைக்கு அறிமுகமானார். கல்லுக்குள் ஈரம் என்ற தமிழ் சினிமாவின் மூலம் தான் திரைத்துறைக்கு அறிமுகமானார் விஜயசாந்தி.

மன்னன் படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாகவும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் எதிரியாகவும் அசத்தியிருப்பார்.30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் ஆக்ஷன் நடிகையாக வலம் வந்தார்.

அரசியலில் பிஸியாக உள்ள விஜயசாந்தி மேதக் தொகுதியின் எம்பியாவார். சினிமாவுக்காக ஏராளமான விருதுகளை குவித்துள்ள நடிகை விஜயசாந்தி, கடந்த 13 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார்.

லேடி சூப்பர் ஸ்டார், லேடி பாஸ் என பல பட்டப் பெயர்களில் அழைக்கப்படும் நடிகை விஜயசாந்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மகேஷ் பாபுவுடன் சரிலேறு நீக்கெவரு என்ற படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

கடந்த 10ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில் விஜயசாந்தி தனக்கே உரிய பாணியில் ஆக்ஷனில் பட்டையை கிளப்பியிருக்கிறார்.

இதன் ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ஜெய் விஜயசாந்தி என கொண்டாடி வருகின்றனர்.

என்னுடைய சூப்பர் ஸ்டார்.. சூப்பர்.. நன்றி இயக்குநர் சார் என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of