கிட்னியை விற்க முயன்ற தம்பதி.. இறுதியில் பறிபோன ரூ.17 லட்சம்.. உஷார் மக்களே..

610

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வசித்து வருபவர்கள், காமேஷ்வர் மற்றும் பார்கவி தம்பதியினர். மெடிக்கல் ஷாப் நடத்தி வரும் இவர்கள், அத்தொழில் நஷ்டம் அடைந்ததால், பெரும் கடன் பிரச்சனையில் சிக்கிக்கொண்டனர்.

இதனால், தனது சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்கு பார்கவி முடிவு செய்தார். இதையடுத்து, இணையத்தில் பல்வேறு தரகர்களை காமேஷ்வர் தேடி வந்தார். அப்போது, அறிமுகமாகிய சோப்ரா சிங் என்பவர், பார்கவியின் கிட்னியை 2 கோடிக்கு விற்பனை செய்து தருவதாக கூறினார்.

மேலும், முன்பணமாக 17 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறினார். இதனை நம்பிய தம்பதியினர், வங்கியில் இருந்து கடன் வாங்கி சோப்ரா சிங்கிற்கு அளித்துள்ளனர். 17 லட்ச ரூபாயையும், கொஞ்சம் கொஞ்சமாக 24 முறை சோப்ரா சிங் பெற்றுள்ளார்.

மீண்டும் ரூ.5 லட்சம் கேட்டதையடுத்து, உஷாராகிய தம்பதியினர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.