கோவையில் விஜய் படத்தின் பேனர்கள் கிழிப்பு

971

நடிகர் விஜயின் சமீபகால படங்களில் பெரும்பாலானவை சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தீபாவளி அன்று ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடித்து வெளியான ’சர்கார்’ படமும் சர்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தில் அதிமுக அரசின் இலவச திட்டங்களை அவதூறு பரப்பும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் கோவையில் உள்ள சாந்தி திரையரங்கம் முன்பு அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். இதனால் திரையரங்கின் நுழைவு வாயிலை ஊழியர்கள் இழுத்து மூடினர். போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, விஜய் படத்துடன் கூடிய பேனர்களை அதிமுகவினர் கிழித்து எறிந்தனர்.

கோவை முழுவதும் சர்கார் திரையிடப்பட்டுள்ள திரை அரங்குகளின் காட்சிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக போராட்டம் போராட்டம் நடத்தினர்.

Advertisement