ஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer

339

பிகில் ட்ரைலர் படைத்த புதிய சாதனை
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘பிகில்’. தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் அக்டோபர் 12ம் தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது. வெளியான சிறிது நேரத்திலேயே ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங் ஆனது.

இந்நிலையில், தற்போது யூடியூப்பில் 2 மில்லியன் லைக்குகளை பிகில் டிரைலர் பெற்றுள்ளது. இது இந்திய மொழி படங்களின் டிரெய்லர்களில் அதிக விருப்பங்களை பெற்ற டிரெய்லர் என்ற புதிய சாதனையை பெற்றிருக்கிறது.

இதற்கு முன் அதிக விருப்பங்களை இந்திய அளவில் பெற்ற டிரெய்லரில் ஷாரூக் கான் நடித்த ‘ஜீரோ’ முதலிடத்தில் இருந்தது. அதை பிகில் டிரைலர் முறியடித்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.