இன்று விஜய் பிறந்த நாள்: ‘பிகில்’ திரைப்படத்தின் Second look வெளியிடப்பட்டது

427

தெறி, மெர்சல் படங்களின் வெற்றியால் அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

கால்பந்தாட்டம் தொடர்பான கதையில் உருவாகும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, இந்துஜா, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். (ஜூன் 22) விஜய் பிறந்தநாள் என்பதால் நேற்று(ஜூன் 21) மாலை 6மணியளவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். படத்திற்கு பிகில் என பெயர் வைத்துள்ளனர் . இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

படத்திற்கு பிகில் என பெயர் வைத்துள்ளனர். காலை முதலே விஜய் தொடர்பான ஹேஷ்டாக் உடன் டுவிட்டரில் டிரெண்ட்டிங்கில் இருந்த விஜய் ரசிகர்கள் போஸ்டர்  வெளியானதும் உலகளவில் டிரெண்ட்டிங்கிற்கு கொண்டு வந்தனர்.

மேலும் இன்று 12:00 மணியளவில் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டனர். அதுவும் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of