மக்கள் செல்வனை அப்செட்டாக்கிய அரசியல் ஆடியோ! சர்ச்சைக்கு வைத்த ஃபுல் ஸ்டாப்!

696

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஆதரவாக நடிகர் விஜய்சேதுபதி பேசுவதைப் போன்று ஆடியோ ஒன்று வெளியானது. இதனைக்கண்ட அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விஜய்சேதுபதி, எனது குரலை ஏன் பயன்படுத்தினாங்கனு தெரியலை. என் ரசிகர்களும் என்கிட்ட இதைப் பற்றிச் சொன்னாங்க.

நான் அந்தத் தொகுதி மக்களுக்குச் சொல்வது ஒன்றுதான். அது என் குரலே இல்ல’ என்றார். மேலும், தேர்தலில் வாக்களிப்பது குறித்து அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு அறிவுரையாக, உங்க தொகுதிக்கு யார் நல்லது செய்யவாங்கன்னு நினைக்கறீங்களோ, அவங்களுக்கு ஓட்டு போடுங்க.

ஆனா, நிச்சயம் ஓட்டு போடுங்கள் என விஜய் சேதுபதி தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of