இன்னும் இது முடியலையா..? இந்த முறை சிக்கியது விஜய்சேதுபதி ..!

625

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால், நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த அறிவிப்பிற்கு, பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். சிலர் ஆதரவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார் என்று தெரிவித்தார்.

மக்கள் செல்வனின் இந்த கருத்துக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் மறைமுகமாக சாடியுள்ளார். அவர், காஷ்மீர் பற்றி சிலர் தவறாக கருத்து கூறுகிறார்கள். சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? காஷ்மீரை பற்றி ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள்.

பெரியார் பற்றி எல்லாம் தேவையில்லாமல் எடுத்துக்காட்டு கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார். பாஜக தலைவர்களுக்கும், தமிழக முக்கிய ஹரோக்களுக்கும் இடையே அடிக்கடி டிஷ்யும், டிஷ்யும் நடந்து வருகிறது. முதலில் விஜய்க்கு பாஜகவுக்கும் மெர்சல் படத்தின் மூலம் பிரச்சனை ஏற்பட்டது.

அடுத்து அஜித், தனக்கும் அரசியலுக்கும் தொடர்பே இல்லை தொடர்பே இல்லை என்று பாஜகவினரை மறைமுக சாடி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனால் அஜித்திடம் பாஜகவிற்கு பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து சூரியா புதியக்கல்விக்கொள்கை குறித்து பேசியதால் அவர் மீது பல்வேறு கண்டனங்கள் பாஜகவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினியை மட்டும் எந்த கருத்துக்கூறினாலும் பாஜகவினர் விமர்சிப்பதில்லை. அது ஏன் என்று அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of