மீண்டும் பன்னீர்செல்வமாக வருகிறார் விஜயகாந்த்!!

211
vijaya-kanth

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், வரும் 16-ஆம் தேதி சென்னை திரும்புகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் மேல் சிகிச்சை முடிந்த நிலையில், பூரண உடல் நலத்துடன் வரும் 16 ஆம் தேதி, விஜயகாந்த் தாயகம் திரும்புவார் என்று தேமுதிக கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் சென்னை திரும்பியதும், மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க உள்ளதாக பரவலாக பேசப்படும் நிலையில், விஜயகாந்த் சென்னை திரும்பியதும் கூட்டணி பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.