கமல் மற்றும் சிவாஜியை முந்திய சீயான்..! ஆச்சரியத்தில் திரையுலகம்..!

491

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் திரைப்படங்களைத்தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கும் திரைப்படம் கோப்ரா. சீயான் விக்ரம் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, நடிகர் விக்ரம் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, 12 வேடங்களில் விக்ரம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சிவாஜி நவராத்திர திரைப்படத்தில் 9 வேடங்களிலும், நடிகர் கமல் ஹாசன் தசாவதாரம் திரைப்படத்தில் 10 வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of