“இனிமே குடிச்சிட்டு வருவியா..” கிராம மக்கள் போட்ட அதிரடி திட்டம்..! மிரண்ட குடிமகன்கள்..!

504

நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று மது தான். இந்த மதுவினால், நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு உயிர்கள் பறிபோகிக்கொண்டு தான் உள்ளது. இதனால் பல தாய்குலங்களின் தாளி அறுக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.

இதற்கு எதிராக பல்வேறு கிராமங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சிறு கிராமத்தில் எடுத்துள்ள ஒரு வித்தியசமான அனுகுமுறை, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அமிர்காத் என்ற பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஆண்கள் பலரும் மதுவுக்கு அடிமையானதால், குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

இதனைத்தடுக்க ஊர் தலைவர்கள் ஒன்றாக கூடி ஒரு முடிவை எடுத்தனர். அதன்படி, ஊருக்குள் குடித்துவிட்டு வருபவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் அபராதம் என்றும், குடித்துவிட்டு தகராறு செய்பவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் மற்றும் அந்த கிராமத்தில் உள்ள 800 பேருக்கும் கறி விருந்து அளிக்க வேண்டும் என்று அதிரடியாக முடிவு எடுத்தனர்.

ஆரம்ப காலகட்டத்தில் 3 முதல் 4 நபர்கள் பிடிப்பட்டனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல குடித்துவி;ட்டு ஊருக்குள் வரும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது யாரும் அந்த கிராமத்தில் மது அருந்தாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, அமைதியும், அன்பும் நிறைந்திருப்பதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.