ஒலிம்பிக் தொடர் ! தகுதிபெற்ற வினேஷ் போகத் | Vinesh Phogat

749

கஜகஸ்தானில் தற்போது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானைச் சேர்ந்த மயு முகைடாவிடம் 0-7 எனத் தோல்வியடைந்தார் வினேஷ் போகத். மயு முகைடா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் ரீபேக்கேஜ் சுற்று மூலம் வெண்கல பதக்கத்தை வெல்ல போட்டியிடும் வாய்ப்பு வினேஷ் போகத்துக்கு கிடைத்தது.

ரீபேக்கேஜ் சுற்றில் முதல் ரவுண்டில் உக்ரைனைச் சேர்ந்த யுலியா கல்வாட்சியை 5-0 என வீழ்த்தினார். 2-வது ரவுண்டில் சாரா ஹில்டேபிரான்ட்-ஐ 8-2 என வீழ்த்தினார். இதன் மூலம் வெண்கல பதக்கத்திற்கு சுற்றுக்கு முன்னேறியதுடன், அடுத்த ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார்.