ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் க்கு விளையாட தடை ?

638

பிரபல இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, பெண்கள் குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுலிடம் உச்ச நீதிமன்ற நியமன கிரிக்கெட் கமிட்டி தலைவர் விநோத் ராய் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு நிகழ்ச்சியின் போக்கில் எதோ ஒரு ஞாயபகத்தில் அப்படி கூறிவிட்டதாக பாண்டியா விளக்கம் அளித்தார். ஆனால் கே.எல்.ராகுல் விளக்கம் ஏதும் அளிக்காமல் மவுனம் காத்து வந்தார். இந்நிலையில், பாண்டியாவின் விளக்கம் ஏற்கத்தக்கதாக இல்லை எனக்கூறி பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரை 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு விநோத் ராய் பரிந்துரை செய்துள்ளார்.

இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of